சுவிட்சர்லாந்து

சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து தொடர்பில் விளக்கம்

சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள சுவிஸ் தூதரகம் இதற்கு பதில் அளித்துள்ளது. விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள போதிலும், விசா நடைமுறை இடைநிறுத்தப்படவில்லை என்றும், சேவையை தொடரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் “இந்தியாவில் சுற்றுலா குழுக்களுக்கான ஷெங்கன் விசா செயலாக்கம் தற்போதைக்கு நிறுத்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு நாளைக்கு சுமார் 800 சந்திப்புகள் உள்ளன. அதில் 22 குழுக்கள் உள்ளன” என்று தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார். 2019-ஆம் ஆண்டை விட அதிகமான விசா விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். Schengen Visa Appointments for Indian Tour Groups, Embassy of Switzerland, Schengen Visa for Indians, Schengen Visa ஷெங்கன் விசா சுற்றுலா அல்லது வணிக நோக்கங்களுக்காக ஐரோப்பாவில் உள்ள 26 ஷெங்கன் உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட ஷெங்கன் விசா அனுமதிக்கிறது. விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாலும், பணியாளர்கள் பற்றாக்குறையாலும் இந்திய பயணிகளுக்கான ஷெங்கன் விசா செயலாக்கம் அக்டோபர் மாதம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Back to top button