சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் உறைந்த மாணவ மாணவியர்
சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றை திடீரென பொலிசாரும் தீயணைப்புக் குழுவினரும் சுற்றி வளைத்ததால், மாணவ மாணவியர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் ஒன்று நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெனீவாவிலுள்ள Carouge என்னுமிடத்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றிற்கு நேற்று காலை துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக, மாணவ மாணவியர் கதவுகளை உட்புறமாக பூட்டிக்கொண்டு பெஞ்ச்களின் கீழே பதுங்கிக்கொண்டனர்.
உடனடியாக ஆயுதம் ஏந்திய பொலிசாரும், தீயணைப்புக் குழுவினரும் பள்ளியை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், பள்ளியில் மேற்கொண்டதீவிர சோதனையில் யாரும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, 350 மாணவ மாணவியரும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மூன்று மாணவ மாணவியருக்கு மட்டும் மன நல ஆலோசகர்கள் ஆலோசனை அளிக்க வேண்டியதாயிருந்தது. அது ஒருவேளை போலியான மிரட்டலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.