சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து. U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்த பட்டியலில், கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்த சுவிட்சர்லாந்து, இந்த ஆண்டும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்

1. சுவிட்சர்லாந்து

2. கனடா

3. ஸ்வீடன்

4. அவுஸ்திரேலியா

5. அமெரிக்கா

2022இல் இரண்டாவது இடத்திலிருந்த ஜேர்மனி தற்போது 7ஆவது இடத்துக்கு இறங்கிவிட்டது. 31ஆவது இடத்திலிருந்த இந்தியா 30ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், கலை மற்றும் கலாச்சாரத்தில் இந்தியா 8ஆவது இடத்திலும், மிக வலிமையான நாடுகள் பட்டியலில் 12ஆவது இடத்திலும் உள்ளது.

Back to top button