இலங்கை

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – 49வது ஆண்டு நினைவேந்தல்!

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும்.

அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில்
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இன்று நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பொதுமக்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நடந்தது என்ன?

1974ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி முதல் பத்தாம் திகதி வரைதமிழ் மொழி, பண்பாடு என்பனவற்றை பறைசாற்றும் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்

மாநாடு நடப்பதை விரும்பாத அப்போதைய இலங்கை அரசாங்கம் குழப்பங்களை விளைவிக்க தீர்மானித்திருந்தது.முன்னதாகவே பலவகையிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது அப்போதைய யாழ். உதவி பொலிஸ்மா அதிபர் சந்திரசேகரா தலைமையிலான போலீசார் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பொது மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள்.இந்த சம்பவத்திலேயே ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.

பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகரா பின்னர் பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button