இலங்கை

கொழும்பில் சஜித்தின் பேரணி மீது நீர்த்தாரை கண்ணீர் புகை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று சஜித் அணியினர் ஆர்ப்பாம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர், ஆர்ப்பாட்டகாரகள் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் வந்தபோது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

பேரணியின்போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்துக்கு அருகில் பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Back to top button