இலங்கை

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவம்: பெண் உட்பட 6 வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு – மாங்குளம், கொக்காவில் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கைக்கு சொந்தமான அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (12-02-2024) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம், கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Back to top button