நீங்கள் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலை… அது அள்ளி தரும் நன்மைகள்
சாப்பிடும் உணவில் இருந்து ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் இருகின்றது என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம். அது உண்மை தான். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரியும், பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் என காணப்படுகிறது.
இது சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய நோய்கள் குணமடைகிறது. மேலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
நன்மைகள்
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது
செரிமானத்தை அதிகரிக்கும்
கல்லீரலுக்கு நன்மை தரும்
முடி வளர்ச்சியை அதிகரிக்கும்
கண் ஆரோக்கியத்திற்கு உதவும். பாக்டீரியாக்களை அழிக்கிறது
எடை குறைக்கும்
பக்க விளைவுகளை கட்டுப்படுத்துகிறது
இரத்த ஓட்டத்திற்கு நல்லது
நீரிழிவை எதிர்த்து போராடும்
காயங்களை குணப்படுத்த உதவுகிறது
கறிவேப்பிலை மிகவும் சுவையானது மட்டுமல்ல, பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அவற்றை உட்கொள்வது உங்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் சிறப்பு என்னவென்றால், உங்கள் உணவின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டையும் அதிகரிக்க கறிவேப்பிலை பயன்படுகிறது. எனவே இதை உணவில் ஒதுக்கி வைக்காமல் தினமும் எடுத்துக்கொள்ளவும்.