சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரயிலுக்கு புலம்பெயர்ந்தோர் தீவைத்ததாக பரவும் செய்தி!

சுவிட்சர்லாந்தில், ரயில் ஒன்றிற்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோர் தீ வைத்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பிரான்சில் அல்ஜீரியப் பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலிசார் சுட்டுகொன்றதைத் தொடர்ந்து உருவான கலவரம் சுவிட்சர்லாந்துக்கும் பரவியது. அதைத் தொடர்ந்து, Lausanne நகரில் உள்ள கடைகளின் ஜன்னல்களை உடைத்ததாக 15 முதல் 17 வயதுள்ள ஆறு இளைஞர்களை பொலிசார் கைது செய்தார்கள். அவர்களில் மூன்று பேர் பெண் பிள்ளைகள்.

இதேவேளை, அந்த கலவரத்துடன் தொடர்புபடுத்தி, சுவிட்சர்லாந்தில், ரயில் ஒன்றிற்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோர் தீ வைத்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் Altstetten என்னும் ரயில் நிலையத்தின் பெயரைக் காணமுடிகிறது. இது குறித்து சுவிஸ் ஊடகம் ஒன்று சுவிஸ் பெடரல் ரயில்வே செய்தித்தொடர்பாளரிடம் விசாரித்தபோது, அவர், இப்படி ஒரு ரயில் பெட்டி தீப்பிடித்தது உண்மைதான் என்றும், அது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார். ஆனால், அது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏற்பட்ட தீ என்னும் கோணத்திலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், மூன்றாம் தரப்பினரின் பங்கு எதுவும் அதில் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, இணையத்தில் பரவும் அந்த வீடியோ தொடர்பான செய்தியில் கூறப்பட்டுள்ளதுபோல, அந்த சம்பவத்துக்கும் இஸ்லாமிய புலம்பெயர்ந்தோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

Back to top button