இலங்கை

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் சாத்தியம்!

இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Back to top button