ஆன்மிகம்

சனி பகவானுக்கு பிடித்த ராசி இவர்கள் தான்: உங்கள் ராசி என்ன?

சனி பகவான் என்றால் எல்லோரும் பயந்து ஒதுங்குவார்கள். இதற்கான காரணம் அவர் தீய விளைவுகளை கொடுப்பதனால்.

ஆனால் சனி பகவான் நாம் செய்யும் நன்மை தீமைகளை பொறுத்தே நமக்கான பலனை தருகிறார்.

இவர் அனைத்து கிரகங்களிலும் முக்கியமான கிரகமாக உள்ளார். இவர் சூரியபகவானின் புத்திரன் ஆவார்.

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவர் பலன்களை அளிப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

இவர் ஒரே ராசியில் அதிகமான நாட்கள் இருந்தால் இந்த ராசிகளின் தாக்கங்களும் அதிகமாக காணப்படும். அந்த வகையில் ஜோதிட ரீதியில் இவருக்கென்று சில ராசிகள் பிடிக்கும் என நம்பப்படுகின்றது.

இவருக்கு பிடித்த ராசி என்பதால் சனி பெயர்ச்சி காலத்திலும், ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் இவர்களது பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார்.

இந்த நிலையில் இவருக்கு பிடித்த ராசி என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மேஷம்

பொதுவாக சனி பகவானுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் மேஷ ராசி காரர்கள் உழைப்பாளிகள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

இதனால் தான் மேஷ ராசியினர் சனி பகவானின் செல்லப்பிள்ளை என்று கூறுகிறார்கள்.இவர்களுக்கு சனியின் அருள் எப்பவும் கிடைக்கும்.

தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பொருள்படுத்தாமல் மற்றவர்களுக்கு இவர்கள் உதவுவதால் இவர்களின் கஷ்டங்களை சனிபகவான் தீர்த்து வைக்கிறார்.

2.துலாம்

சனி பகவானுக்கு பிடித்த ராசி என்றால் அதில் முக்கியபங்கு பெறுவது துலாம் ராசியினர் தான்.இந்த ராசியின் அதிபதி சுக்கிரனாவார்.

இதனால் தான் சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள் இந்த ராசிக்கு பல மடங்காக கிடைக்கிறது.

சனி பகவான் இவர்களுக்கு தீய விளைவுகளை குறைத்தும் நல்ல விளைவுகளை பலமடங்கு அதிகரித்தும் அவர் அருள் பொழிகிறார்.

3.மகரம்

மகர ராசிக்காரர்கள் என்போதும் உழைப்பாளியாக இருப்பதால் சனி பகவான் இவர்கள் மீது எப்போதும் பிரியமானவர்.

இவர்களின் உழைப்பிற்கேற்ற பலனை அவர் கொடுப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார்.

இதனால் இவர்கள் கடினமாய் உழைத்தால் மட்டும் போதும் சனி பகவானின் அருளை பெற்று விடுவார்கள். அவர்கள் இலக்கை அடைவதை சனி பகவான் உதவியாக இருப்பார்.

4.கும்பம்

இவர்கள் நிதி நிலமையில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள்.இவர்கள் மற்றர்களுக்கு கொடை கொடுப்பதில் வல்லவர்காளாக உள்ளார்கள்.

இதனால் தான் சனிபகவான் அவர்களுக்கு எப்போதும் உதவி செய்து கொண்டு இருப்பார்.

இவர்களுக்கு ஏழரை சனி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது. பிரச்சனைகள் கொஞ்சமாகவும் நன்மைகள் ஏராளமாகவும் பெறுகிறார்கள்.

Back to top button