இலங்கை

பாணின் விலை 170 ரூபாவாக அதிகரிப்பு!

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக இந்த அத்கரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

பாணுக்கான மூலப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, 450 கிராம் எடையுள்ள பாணை 160 ரூபா முதல் 170 ரூபா என்ற விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாணை சரியான எடையில் தயாரிக்குமாறு தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த முடியும் எனவும், ஆனால் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button