இலங்கை
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் விலை!

உணவுப்பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் சோற்றுப்பொதி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக வும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.