இலங்கை
கொழும்பின் புறநகர் பகுதியில் வெளியேறும் புகையால் ஏற்பட்டுள்ள பரபரப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் இருந்து வெள்ளை புகை ஒன்று வெளியேறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அவை குளோரின் போன்ற வாசனையை ஏற்படுத்துவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுவாசிக்க கடினமாக இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.