இலங்கை
முதலீட்டாளர்களுக்கு இதுவே சிறந்த தருணம்! அழைப்பு விடுக்கும் இலங்கை
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் – சென்னையில் இடம்பெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” என்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்போது கடன் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது, எனவே முதலீட்டாளர்கள் இலங்கை சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்தார்.