மீண்டும் சொத்துக்குவிப்பால் தமிழக அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் எடுத்த முடிவு
தமிழக அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. கடந்த 1996 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்தார்.
இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை சோதனை காலமாக எடுத்துக் கொண்டு பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்த்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, இந்த வழக்கில் 172 சாட்சியிடம் விசாரிக்கப்பட்டு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா, பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றம் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. மேலும், உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். madras high court / நீதிமன்றம் இதில், அமைச்சர் பொன்முடியின் லஞ்ச வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர இருக்கிறது.