உடல்நலம்

கூந்தல் பராமரிப்பிற்கான சிறந்த 5 டிப்ஸ்- மருத்துவர் கூறும் விளக்கம்

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

அந்தவகையில் மருத்துவர் ஷர்மிகா தருண் கூந்தல் பராமரிப்பிற்கான சிறந்த 5 டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

மருத்துவர் கூறும் டிப்ஸ்

  1. முதலில் தலையோடு குளித்த பிறகு பருத்தி துண்டு தான் பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம் 10 நிமிடம் தான் தலையில் துண்டு கட்ட வேண்டும். முடியின் திசையை பொறுத்து தலையில் துண்டு கட்டவும். கூந்தலை சூரிய ஒளியில் உலர்த்துவது என்பது மிகச்சிறந்தது.
  2. வாரத்திற்கு ஒரு முறை முட்டை வெள்ளை கரு + தயிர் இந்த ஹேர்பேக்கை கூந்தலுக்கு தடவி 30 நிமிடத்திற்கு பின் சுத்தம் செய்துகொள்ளலாம். இது கூந்தலுக்கு குளிர்ச்சியளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  3. கூந்தலை சீவுவது என்பது மிகவும் முக்கியம், இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. காலை, இரவு என 2 வேளைகளில் 3 நிமிடங்கள் வரை கூந்தலை சீவ வேண்டும்.
  4. தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  5. எண்ணெயில் பருத்தியை நனைத்து அதனை உச்சந்தலையில் ஒத்தரம் கொடுத்து நன்கு மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம். இரவு முழுக்க தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது என்கிறார் மருத்துவர் ஷர்மிகா தருண்.

Back to top button