சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் நிகழ்ந்த விபரீதம்!- விமானம் விபத்தில் பலர் உயிரிழப்பு

சுற்றுலா விமானம் சுவிட்சர்லாந்து நியூசெட்டல் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் நியூசாடெல் மலைகளில் உள்ள வனப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் பிரான்ஸ்-சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள Ponts-De-Martel என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் காவல்துறை இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. விசாரணை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பொலிசார் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர், அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விமான விபத்துக்கு வழிவகுத்தது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விமானியும் இரண்டு பயணிகளும் உயிரிழந்ததாகவும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த விமானம், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள Chaux-d-Fonds விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.