மாறி மாறி விடுவிக்கப்படும் பயண எச்சரிக்கைகள்: கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல்
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/09/Untitled-design42-780x470.png)
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அடுத்த கட்டமாக, இரு நாடுகளும் மாறி மாறி பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.
கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல்
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்துகொண்டே செல்கிறது. கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டினார். இந்தியா அதை மறுத்துள்ளது. இப்படி இரு நாடுகளுக்குமிடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், செவ்வாயன்று இந்தியா செல்லும் கனேடியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறியது கனடா அரசு.
அதைத் தொடர்ந்து, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய இந்தியா, கனடாவுக்குச் செல்லும் மற்றும் கனடாவில் வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும், அரசியல் உள் நோக்கம் கொண்ட இனவெறுப்புக் குற்றங்களும் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்தியாவின் எச்சரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரான Dominic Leblanc, கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று கூறியுள்ளார்.