ஆன்மிகம்

30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் திரிகிரக யோகம்; அதிர்ஷ்டம் பெறவுள்ள இராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அதுவும் மூன்று கிரக சேர்க்கைகளால் திரிகிரக யோகமும் 4 கிரக சேர்க்கைகளால் சதுர்கிரக யோகமும் உருவாகக்கூடும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் (15.03.2024) ஆம் திகதி செவ்வாய் கும்ப ராசிக்கும், (07.03.2024) ஆம் திகதி சுக்கிரன் கும்ப ராசிக்கும் செல்லவுள்ளனர். இப்படி கும்ப ராசியில் இவ்விரு கிரகங்களும் நுழைவதால், கும்ப ராசியில் சனி, செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த 3 மூன்று கிரகங்களின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நிகழ்வதால், இந்த யோகம் சற்று சிறப்பானதாக இருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.ஆளுமை மேம்படும்.

இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் நல்ல வரனைப் பெற வாய்ப்புள்ளது.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் வருமானம் மற்றும் லாபத்தின் வீட்டில் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.

பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.

இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இதனால் இக்காலத்தில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.

வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.

Back to top button