ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசியினர்.. இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 16.02.2024, சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.04 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று பிற்பகல் 02.34 வரை பரணி. பின்பு கிருத்திகை. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
சின்ன சின்ன விஷயங்களுக்கு டென்ஷனாவீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கோபமாக பேசினால் நல்ல உறவுகளை இழப்பீர்கள். தெய்வ பக்தியில் நாட்டம் செலுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பீர்கள். தண்ணீர் பிரச்சனைக்காக பக்கத்து வீட்டில் சண்டை போடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தைத் தேடுவீர்கள். மாணவர்கள் மன அழுத்தம் குறைந்து படிப்பீர்கள். அரசாங்கம் மூலம் சாதகமான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அன்பாக பேசி நிம்மதியை கொண்டு வருவீர்கள்.

மிதுனம்
மிதுனம்
பங்குதாரர்களுடன் இருந்து வந்த பேசித் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊக்கமுடன் வேலை செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகள் உறுதுணையை பெறுவீர்கள். தாமதமில்லாமல் புதிய ஆர்டர்களை அடைவீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள்.

கடகம்
கடகம்
புதிய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். திருமண முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த கடன் உதவியைப் பெறுவீர்கள். வீடு மனைகள் வாங்குவதற்கான முயற்சியை முன்னெடுப்பீர்கள். திறமையாகச் செயல்படுவீர்கள். பாராட்டை அள்ளுவீர்கள்.

சிம்மம்
சிம்மம்
கார் ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட மறக்காதீர்கள். இடமாற்றத்தால் வெளியூர் செல்வீர்கள். குடும்பத்தில் வெடித்த திடீர் பிரச்சனையால் தடுமாற்றம் அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை வடிவமைப்பீர்கள். பகையை வென்று தடையைத் தகர்ப்பீர்கள்.

கன்னி
கன்னி
சோதனைகளை சாதனைகளாக மாற்றப் பெரும் முயற்சி செய்வீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் தொடர்பான நல்ல வாய்ப்பை பெற போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை உயர்வுக்கான ஏற்பாட்டை செய்வீர்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீர்கள். . சந்திராஷ்டமம். கவனம் தேவை.

துலாம்
துலாம்
புதிய முயற்சிகளில் தடையில்லாமல் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வீட்டு தேவையை முன் நின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனமாக வேலை செய்வீர்கள். வீண் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் தள்ளி நிற்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நண்பரின் உதவியை நாடுவீர்கள். கண் பரிசோதனைக்காக தந்தையாரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
வியாபாரத்திற்கு உண்டாகும் சின்ன சின்ன தொல்லைகளை விலக்குவீர்கள். முக்கிய கடனை அடைக்க கடுமையாக பாடுபடுவீர்கள். வேலைக்கு வெடிவைக்க நினைத்தவர்களின் முன்னால் இடிபோல் இறங்குவீர்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கவனமுடன் நடத்தி வெற்றி பெறுவீர்கள். புதிய நபர்களுக்கு கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

தனுசு
தனுசு
தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் திடீர் சச்சரவுகளால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனமுடன் செயல் படுவீர்கள். எந்த வேலையிலும் அவசரம் காட்டாதீர்கள். காதலியுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். பெருந்தொகைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். வேலை மாறுதல் அடைவீர்கள்.

மகரம்
மகரம்
திறமையை மூலதனமாகக் கொண்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கலான பிரச்சினைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையை பெறுவீர்கள். அனைத்து தடைகளும் அகன்று தொழில் மேன்மை காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிக லாபம் அடைவீர்கள்.

கும்பம்
கும்பம்
தைரியமாக எதையும் எதிர்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். கையிருப்பு அதிகப்படுத்துவீர்கள். சகோதரர் வகையில் உதவி பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சியை நடத்துவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

மீனம்
மீனம்
எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாக பயன்பெறுவீர்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். அரசாங்கம் மூலமாக சில காண்ட்ராக்ட்களை தடை இன்றி பெறுவீர்கள். முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை பொறுப்போடு வாங்கி போடுவீர்கள்.

Back to top button