பிரேசிலில் தொடரும் வன்முறை – ஜனாதிபதி கண்டனம்
பிரேசிலில் இடம்பெற்றுவரும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிப்பதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்த நிலையில் . முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
இந்த நிலையிலேயே பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அரசியலமைப்புக்கு முரணான ஜனநாயகக் கட்டமைப்புகளை கவிழ்க்கும் முயற்சியை இலங்கையும் அனுபவித்திருப்பதாகவும் இத்தகைய விரோதப் போக்குக்கு மத்தியில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் இலங்கை ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.