ஒரே குடும்பத்தில் மூவர் ஒரே ராசியாக இருந்தால் வரும் பிரச்சினையிலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்?
பொதுவாகவே இந்து மதத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஜோதிடத்தை அதிகமாக நம்புவார்கள். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் ஒரே ராசியில் இருந்தால் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே அவர்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
குடும்பத்தில் ஒரே ராசியில் 3 பேர்
ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருப்பது ஜோதிடத்தில் ஒரு மோசமன நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
திருமணம் செய்யும் போது மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் ஒரே ராசியாக இருந்தால் அவர்கள் திருமணம் செய்ய கூடாது என்று கூறுவார்கள்.
அதையும் மீறி காதலித்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று ஒரே ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்துக்கொள்வார்கள்.
அவ்வாறு செய்வதனால் ந்த ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வந்தால் இருவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
இப்படி ஒரே ராசியைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அதே ராசியாக அமைந்தால் ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியுடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
இவர்கள் மூவருக்கும் நற்பலன் என்றாலும் தீய பலன்கள் என்றாலும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள்.
இதன் காரணமாக திடீர் விபத்து அல்லது இழப்புகள் ஏற்படக் கூடும். ஆகவே இவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என பார்க்கலாம்.
பரிகாரம்
ஆண்டுதோறும் சம்ஹார ஸ்தலமான திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.
அல்லது கடற்கரை பகுதியில் இருக்கும் சம்ஹார ஸ்தலங்களில் சுவாமி தரிசனம் செய்வது நல்லது.
செய்யக் கூடாதது
கணவன், மனைவி பணி இட மாற்றம் பெற்று வேறு வேறு இடத்தில் வசிப்பது நல்லது.
மகன் அல்லது மகள் படித்துக் கொண்டிருந்தால் அவர்களை உறவினர் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். இதனால் வரும் பிரச்சினையை குறைத்துக்கொள்ள முடியும்.
மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி நடக்கும் போது இவர்கள் மூவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியமாக ஒரு விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.