சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் விலைவாசி தொடர்பில் வெளிவந்த கவலை தரும் செய்தி!

விலைவாசி தொடர்பில் சுவிட்சர்லாந்தில் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், பல கட்டணங்கள் சுவிட்சர்லாந்தில் உயர இருக்கின்றன. பணவீக்கமும் உக்ரைன் போரும் சுவிஸ் மக்கள் பொருட்கள் வாங்கும் அளவை பாதிக்கத் துவங்கியுள்ளன. விலைவாசியோ உயர்ந்துகொண்டே செல்கிறது. சமீபத்தில் ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்று, இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி சுவிஸ் குடும்பம் ஒன்று, இனி ஆண்டொன்றிற்கு கூடுதலாக 2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது. 2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது. எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை உயரலாம்?

வாடகை

ஜூன் 1 முதல் சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு 2,000 ஃப்ராங்குகள் வாடகை செலுத்தும் மக்கள், இனி 2,120 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டியிருக்கும்.

காப்பீட்டு பிரீமியம்

பெடரல் பொது சுகாதார அமைப்பு காப்பீட்டு பிரீமியத் தொகை உயர்வு குறித்து இன்னமும் அறிவிப்பு வெளியிடவில்லை. என்றாலும், காப்பீட்டு பிரீமியம் 6 சதவிகிதம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

மின்கட்டணம்

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே மின்கட்டணம் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இனி, 4,500 கிலோவாட் மின்சாரம் செலவிடும் குடும்பம் ஒன்று 1,215 ஃப்ராங்குகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும், அதாவது கூடுதலாக 261 சுவிஸ் ஃப்ராங்குகள்.

பொதுப்போக்குவரத்து

2023 டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து பயணக்கட்டணம் சராசரியாக 4.3 சதவிகிதம் உயர இருக்கிறது.

Back to top button