அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு கார் பரிசு!

தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் விஜய். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார்.
அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.
விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.