இந்தியா

தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த முதியவர் – வைரலாகும் வீடியோ

தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி
பகுதியில் உள்ள கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்ற முதியவரே தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து அசத்தியுள்ளார்.

இவர் விவசாயமும், காய்கறி வியாபாரமும் செய்து வருகிறார்.
கொத்தக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

அன்றைய பொங்கல் தினத்திற்க்காக முதல் 9 ஆண்டுகளாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை செல்லத்துரை வழங்கி வருகிறார். செல்லத்துரை தனது மகளுக்கு இந்த ஆண்டும் ஒரு கட்டு கரும்பு, தேங்காய், பச்சரிசி, வெல்லம்,

பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றார். 78 வயதிலும் கையால் பிடிக்காமல் ஒருகட்டு கரும்பை தலையில் வைத்து சுமந்தநிலையில், 17 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிச் சென்று மகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அவர் அப்படி செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கரும்பில்லாமல் பொங்கலா?

பொங்கல் பண்டிகை கரும்பு இல்லாமல் நடக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்லாம்

அடிக் கரும்பு, மிகவும் இனிப்பாக இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேற கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு ஆரம்பத்தில் இனிமையைத் தராது.

கஷ்டங்களையே கொடுக்கும். ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதே அதன் அர்த்தமாகும்.

மேலும், கரும்பின் வெளிப்புறம் கரடு முரடாகவும், வளைவுகளும் ,முடிச்சுகளும் நிறைந்து இருக்கும் . வெளிப்புறம் ஒரு கடினமான தோற்றத்தையே வெளிப்படுத்தும்.

கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு, உரித்து எடுத்தால்தான் உட்புறத்தில் இருக்கும் இனிமையான சாறு கிடைக்கும்.

அதுபோல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் இருந்தாலும், அவற்றை கடும் முயற்சியோடு, அந்த கரடு முரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பதுதான் கரும்பு உணர்த்தும் தத்துவமாகும்.

Back to top button