பற்றி எரியும் இந்தியாவின் மனிப்பூர் வடமாநிலம்!
இந்தியாவின் வடமாநிலமான பா.ஜ.க ஆட்சியின் கீழ் இருக்கும் மனீப்பூரில் கலவரத்தில் 54 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 35000 க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்து நொருக்கப்பட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு எரிகிறது.
மனீப்பூரில் இருக்கும் மைத்தேயி இனமக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே காரணமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பட்டியல் இன பழங்குடியின மக்கள் இட ஒதுக்கீடு பொருளாதார நன்மைகள் கொடுக்கப்பட்டு இருக்கையில் அங்கே இருக்கும் மைத்தேயி இனமக்கள் இட ஒதுக்கீடடை அனுபவிக்க தங்களையும் SC பட்டியலில் சேர்க்குமாறும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மைத்தேயி இனமக்களுக்கும் பழங்குடி இனத்தவர்களுக்கு ஏற்பட்ட மோதல்களே காரணமாக இருக்கிறது. அங்கே பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் தேவாலயங்கள் எரிக்கப்பட்டு மிக மோசமாக சூழ்நிலை உருவாகியுள்ளது.