இந்தியா

மீண்டும் அச்சுறுத்தும் வைரஸ்!

இந்தியாவில் இன்புளுயன்சா H3​N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதன் அறிகுறிகளாக, காய்ச்சல், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை கூறப்படுகின்றது. இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை கொண்டது. H3​N2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அத்துடன் , இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Back to top button