இந்தியா

விரைவில் வர உள்ள இந்திய -சியோமி 13 ப்ரோ

சியோமி நிறுவனம் தனது சியோமி 13 ப்ரோ இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியோமி 12S சீரிசை தொடர்ந்து சியோமி மற்றும் லெய்கா கூட்டணியில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட்போன் இது ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வெளியீட்டின் போதே சியோமி 13 ப்ரோ மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 13 இந்திய வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் சியோமி 12 ப்ரோ மாடலை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்துஉள்ளது .

சியோமி 13 சீரிஸ் சர்வதேச வெளியீடு இந்திய வெளியீட்டின் போதே நடைபெறும். இந்தியாவில் சியோமி 13 ப்ரோ மாடலின் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு துவங்குகிறது. சியோமி 13 ப்ரோ அறிமுக நிகழ்வு சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டர் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்படும். அம்சங்களை பொருத்தவரை சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K Flexible E6 சாம்சங் AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விசி லிக்விட் கூலிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Back to top button