இந்தியா

ஹவாலா பணப் பரிவர்த்தனை

கேரளாவில் சிக்கிய 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஹவாலா பணப் பரிவர்த்தனை

சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனையை ஒன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது. ஏஜெண்டை வைத்து பணமானது பரிமாற்றம் பெறுகிறது.

அப்படி ஒரு விஷயம் தான் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து 150 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை களத்தில் இறங்கியுள்ளது. ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடைபெறுவதால் கேரள மாநிலம் பரபரப்பிற்கு ஆளாகியிருக்கிறது

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 25 ஹவாலா ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் இந்திய ரூபாய் மட்டுமின்றி வெளிநாட்டு பணமும் கைமாறி இருப்பதாக தெரிகிறது.

Back to top button