இந்தியா

குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான கோர விபத்து..2 லட்சம் நிவாரணநிதி அறிவித்த தமிழக முதல்வர்

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் கார் – லொறி மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர். திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 குழந்தைகளுடன் சேர்ந்து 7 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேராக மோதியதில் கார் நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பெண்ணொருவர் மட்டும் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். படுகாயமடைந்த பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார். நிவாரண உதவி அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Back to top button