தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை: வானிலை மையத்தின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டம் தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை நாளை மற்றும் வருகின்ற 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. heavy rain/கனமழை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் இருக்கும் மற்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் குறைந்தபட்சமாக 25-26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.