இந்தியா

வங்கக்கடலில் 18 மணிநேரத்தில் புயல்! 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இந்தியாவில் வங்கக்கடலில் அடுத்த 18 மணிநேரத்தில் புயல் உருவாக உள்ளதால், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடுத்த 18 மணிநேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலானது ஒடிசாவில் பாரதீப்பில் இருந்து, தெற்கில் சுமார் 430 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், கடந்த 6 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரி என 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 18 மணிநேரத்தில் புயல் வலுப்பெற்றாலும், சற்று வலுகுறைந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button