இந்தியா

இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்: ஆய்வில் தகவல்

இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, முதலிடத்தையும், உலகளவில் 127-வது இடத்தையும் பிடித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. லேடன் அடமோவிக் என்பவர் Google நிறுவனத்தில் Software Engineer-ஆகவும், Bosnia-Herzegovina, Banja Luka என்ற பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர்.

இவர், செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் அவர், உலகின் முக்கிய நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு முடிவை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு முதலிடம்
இந்த ஆய்வில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை பெரும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை போலீஸ் மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமையுடன் கூறியுள்ளார்.

Back to top button