தமிழகத்தில் தொடரும் கனமழை குறித்து எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் தொடரும் கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .மேலும் சென்னையில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமான மழையும், மேலும் 16 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.