தமிழகம் முழுவதும் 50 மணிநேர தொடர் மழை.., காத்திருக்கும் அபாயம்!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக வானிலை ஆய்வாளர் செல்வகுமார் நம்மிடம் பகிர்ந்தவற்றை பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், டிச 2, 3 -ம் திகதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படி, நேற்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், மாலையில் மீண்டும் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேலும், தமிழகத்தில் கனமழை குறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “சென்னையில் தொடர்ந்து 50 மணிநேரம் மழைப்பொழிவு காத்திருக்கிறது. டிசம்பர் 2 -ம் திகதி தொடங்கி 3 -ம் திகதி விட்டு விட்டு மழை பெய்யும். டிசம்பர் 5 -ம் திகதி திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். குறிப்பாக சென்னையில் தொடர்நது 60 மணி நேரம் கனமழை பெய்யும். செம்பரம்பாக்கம், புழல் ஏரி நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்” என்று பேசியுள்ளார்.