இந்தியா

தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வேகமாக வீசக்கூடுமென எச்சரிக்கை

தமிழநாட்டில் சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் நகர்ந்து தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக்ஜாம் புயல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதுடன், புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் மழை குறைந்ததால் சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், புயல் தற்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்ததையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Back to top button