இலங்கை

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக குகதாசன் தெரிவு: மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பான முக்கியபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருவதுடன் இன்று பிற்பகல் நடைபெற உள்ள பொதுச் சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Back to top button