பறவைக்காய்ச்சல் அபாயம் – திருவனந்த புரத்தில் 2 ஆயிரம் பறவைகளை அழிக்க முடிவு!
திருவனந்தபுரம் அருகே பறவை காய்ச்சல் அபாயம் காரணாமாக 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணைகளில் கடந்த சில நாட்களாக கோழிகளும், வாத்துகளும் அடுத்தடுத்து இறந்துவந்த நிலையில்.
அவற்றின் மீதான பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்காக பறவை காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள கோழிகள், வாத்துகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2 ஆயிரம் பறவைகளை இன்று அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.