இந்தியா
தீவிரவாதிகள் ஊடுருவும் சுரங்க பாதைகள் – நிலத்தின் அடியில் ட்ரோன்களை கொண்டு ஆய்வு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே அவ்வப்போது எல்லை பகுதிகளில் சுரங்கங்கள் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவிவரும் நிலையில் பூமியின் அடியில் உள்ளவற்றை ஊடுருவி ஆய்வு செய்யும் ரேடார்களை, ‘ட்ரோன்’ எனப்படும் சிறிய வகை விமானத்தில் பொருத்தி கண்காணிக்கும் முயற்சியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
இதற்கான சிறப்பு ரேடார்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது சோதனை முறையில் இவை எல்லையில் பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தப் பகுதியில், ஐந்து சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.