சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது இந்திய மருத்துவத் துறை!
சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ கருத்துக்களை கூறியமை தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவ குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சித்த மருத்துவர் ஷர்மிகா வலைதளங்களில் மருத்துவ குறிப்புக்கள் சொல்வதன் மூலம் அண்மைக்காலங்களில் பிரபலமானவர்.
அவர் கூறியுள்ள குறிப்புக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என்றும் தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் போன்ற மருத்துவ கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அவர் பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.