இந்தியா

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரதிநிதி

பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவன் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் பொலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Back to top button