இந்தியா

இன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

இன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கோயம்புத்தூர், மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). முன்னாள் பாமக செயலாளரான இவர் கடந்த 2019ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் பொலிசார் பலரை கைது செய்தனர், பின்னாளில் இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில், தற்போது சோதனை நடத்தி வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

Back to top button