இந்தியா

தமிழகத்தில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! குவியும் மக்கள்

இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள சென்னையில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று டீக்கடைக்காரர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது.

அதே போல், உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் கண்பதி ராவ் நகரில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, மக்கள் கூட்டம் டீக்கடையில் அலைமோதியது.

ஆனால், மக்கள் கூட்டத்திற்கு அந்த கடைக்காரர் போலிஸ் பாதுகாப்பு முன்பே போட்டிருந்தார். ஒரு டீ 12 ரூபாய்க்கு வாங்கி 180 ரூபாய் விற்கும் தக்காளியை கொடுத்தால் கூட்டம் அலைமோதாமலா இருக்கும். அதை சுதாரித்த கடைக்காரர், முதலில் வரும் 100 டோக்கனுக்கு மட்டும் தான் தக்காளி இலவசம் என்று கூறி அவர்களுக்கு மட்டும் தக்காளி வழங்கினார்.

Back to top button