இந்தியா

பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு நெஞ்சுவலி.. விரைவில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜாவுக்கு நேற்று மூச்சு திணறலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் இதயத்தில் இரத்தக்குழாய் அடைப்பு இருக்கிறது என்று கூறினர். இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், இவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவமனைக்குக்கு சென்று ஹெச்.ராஜாவை நேரில் நலம் விசாரித்தார்.

Back to top button