வேறொருவருடன் நிச்சயம் செய்துகொண்ட காதலி – தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட காதலன்!

இந்தியா சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த நரேஷ் (வயது 30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். அங்கு பண்ருட்டி அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பணி செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ,
தற்போது அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வேறொரு நபருடன் திருமண நிச்சயம் செய்திருக்கிறார்கள் . இதனை அறிந்த நரேஷ் அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால்தொலைபேசி இயங்காத நிலையில் இருந்தது.
இதையடுத்து பணி செய்த அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண்ணின் விலாசத்தை வாங்கிய காதலன் , அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று நேரடியாக பேசி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள நரேஷ் தீர்மானித்தார்.
இதையடுத்து எடப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் வந்தார். அப்போது நரேஷ் அந்த பெண்ணை நேரடியாக அழைத்து பேசினார். நாம் திருமணம்செய்து கொள்வோம் என்று கூறினார்.
ஆனால் அந்த பெண் அவனுடன் செல்ல மறுத்துவிட்டு பெற்றோர்கள் நிச்சயம் செய்தவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் மனமுடைந்த நரேஷ் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காதலித்த பெண்ணை மிரட்டினார்.
ஆனாலும் அந்த பெண் எனது பெற்றோர்கள் நிச்சயித்த வாலிபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன். நீ ஊருக்கு திரும்பி சென்று விடு என்று கூறிவிட்டு சென்றார். இதனால் மனமுடைந்த நரேஷ்,
வீரப்பெருமாநல்லூர் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டு தன் மீது பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
சத்தம் கேட்டு சாலை பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடல் கருகிய நரேஷை 108 அம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் .
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.