புதுடில்லி ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் பிரமிக்கவைக்கும் நடராஜர் சிலை

ஜி-20 மாநாடு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறு களை கண் முன்னே நிறுத்துகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இம்மாதம் எதிர்வரும் 9, 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாடு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பவை வருமாறு, “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்து கிறது. ஜி-20 உச்சி மாநாட்டிற் காக உலக நாடுகள் ஒன்றுகூடும். போது, இது இந்தியாவின் பழங் கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார் .
