இந்தியா

அமெரிக்க வேலையை விட்டு தமிழகத்தில் மஞ்சள் சார்ந்த தொழில் தொடங்கிய தமிழர்; முதலீடு செய்த நயன்தாரா

மஞ்சள் சார்ந்த பொருள்களை விற்பனை செய்து வரும் தி டிவைன்ஸ் ஃபுட்ஸ் (The Divine Foods) நிறுவனத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் வெற்றி கதையை பார்க்கலாம். தமிழக மாவட்டம் சேலத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்கின்ற கிரு மைக்கா பிள்ளை. இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார். பின்பு, சாப்ஃட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். அடுத்து, அமெரிக்காவின் மாசசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் MBA படித்து விட்டு, அங்கேயே பிரபலமான முதலீட்டு வங்கி ஒன்றில் பணிபுரிந்தார்.

இவருக்கு, இந்தியா வரும்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருந்துகொண்டே இருந்தது. மேலும், இவருடைய பெற்றோருக்கு வங்கி துறையில் தனது மகன் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தான் 2018 -ம் ஆண்டு அமெரிக்க வேலையை விட்டுவிட்டு தமிழகத்தில் விவசாயம் சார்ந்த பொருட்களின் விற்பனையில் கிரு மைக்கா பிள்ளை ஈடுபட ஆரம்பித்தார். இதன் பின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மஞ்சள் விற்பனை சார்ந்த தொழிலில் மாடலாக ஆரம்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, 2019 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தி டிவைன் ஃபுட்ஸ் என்ற உணவு சார்ந்த நிறுவனத்தை தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் விளையும் மஞ்சளில் 2.5 முதல் 3 சதவீதம் வரையிலான குர்குமின் என்ற உயிர்வேதி பொருள் உள்ளது. இதனை வைத்தே மஞ்சளின் தரமும் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால், மஞ்சளின் தரம் குறித்து நுகர்வோருக்கு கவலையளித்தது. இந்த பிரச்னைகளை தீர்க்கும் விதமாக அதன் கட்டமைப்புகளை கிரு மைக்கா பிள்ளை வடிவமைத்தார்.


அதன்படி, தி டிவைன் ஃபுட்ஸ் நிறுவனத்திற்க்கு தேவையான மஞ்சளை இருமடங்கு சந்தை விலையில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பின், மஞ்சளை மூலப்பொருள்களாக கொண்ட குர்குமின் சோப், கோல்டன் மில் லேட், கோடன் லெட், ரெடிமிக்ஸ் பானங்கள், சரும பாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், முருங்கை பொடி, தேன், உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த பொருள்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த ஸ்டார்ட் -அப் நிறுவனமான தி டிவைன் ஃபுட்ஸில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனமானது அதிவேகமாக வளர்ந்து 2025 ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்கள் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button