நோர்வேயை சேர்ந்த இளம் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞர்!
தமிழகத்தில் கடலூர் இளைஞர் பாலமுருகனை நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடலூரில் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
இதேவேளை, திருமணம் முடிந்த கையோடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். அப்போது பேசிய மணப்பெண் சிவனாந்தினி, நான் நார்வே நாட்டில் தான் பிறந்து வளர்ந்தேன், எனக்கு நீண்ட நாட்களாக தமிழ் கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், தற்போது நான் இன்று பாலமுருகனை திருமணம் செய்து கொண்டுள்ளேன். எனக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது, மற்றும் என்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறி இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார். மணமகன் பாலமுருகன் பேசிய போது, முனைவர் பட்டம் பெற்று விட்டு மேற்படிப்பிற்காக நார்வே சென்று இருந்த போது சிவானாந்தினியை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தேன். அப்போது இருவருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போனதை தொடர்ந்து, எங்களுடைய இருவீட்டிற்கும் தெரிவித்தோம், அதன் பிறகு அவர்களுடைய முழு சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.