இந்தியா

இந்தியா To பாரத் பெயர் மாற்றம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு

இந்தியா என்ற பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்ய போகிறதாக தகவல் வெளியான நிலையில் இருந்து எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தியா பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை மாற்றுவதற்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத்தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டதில் இருந்து இந்த விவகாரம் இந்தியா முழுவது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில், “ஆடைகளை மாற்றுவதை போல, தேர்தல் நாடகத்திற்காக தனது நாட்டின் பெயரையும் மாற்ற முயலும் கோமாளியின் பெயரைக் கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, பிரகாஷ் ராஜின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வைரலாக பரவி வருகிறது.

Back to top button