இந்தியா
சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை பிடித்து அனுப்பிய ஆதித்யா-எல்1!

சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியிருந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை அனுப்பியுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய புற ஊதா Imaging Telescope (SUIT) கருவி மூலம் படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 200 முதல் 400 என்எம் வரையிலான அலைநீளங்களில் 11 வெவ்வேறு filterகளை பயன்படுத்தி இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படங்களில் சூரிய புள்ளிகள், Plage மற்றும் அமைதியான சூரிய மண்டலங்கள் ஆகியவை அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
